Wednesday, 29 February 2012

யார் இந்த மார்த்தாண்டன்கள்?

 பத்மநாபபுரம் அரண்மனை

பொதுவாக குளம் என்கிற குட்டையைத் தான் ‘குட்டம்’ என்றும் அழைப்பர். இந்த ஊர் அமைந்துள்ள பகுதியும் தாழ்வானதுதான்.

குட்டம் - உருவான வீர வரலாறு

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு, இங்குள்ள குளக்கரையில் கேரளாவில் இருந்து புதிதாய் வந்த சில குடும்பத்தினர் குடியேறினர்.

யார் இவர்கள்?

அன்றைய கேரளாவின் வேணாட்டு அரசில் சர்வ அதிகாரங்களும் பெற்றிருந்த இவர்கள், அப்பகுதியில் உள்ளூர் நிலப்பிரபுக்களாக திகழ்ந்தனர். ‘எட்டு வீட்டில்  பிள்ளைமார்’ (பேச்சு வழக்கில் எட்டு வீட்டு பிள்ளைமார்) என்ற உயரிய வகுப்பைச் சேர்ந்த இவர்கள், பத்மநாபபுரத்தில் (இன்றைய கன்னியாகுமரி ம £வட்டத்தில் உள்ள - புகழ்பெற்ற அரண்மனைக்கு சொந்தக்கார ஊர்தான்!) வாழ்ந்தனர். மக்கள் தலைவர்களாக செயல்பட்ட இவர்களைச் சார்ந்தே நாட்டை  ஆளும் மன்னர்களும் இயங்கினர்.

இந்நிலையில், வேணாட்டு அரசின் புதிய மன்னராக வாரிசு முறையில் பொறுப்பேற்ற மார்த்தாண்ட வர்மா கி.பி.1729 முதல் 1758 வரை ஆட்சி செய்தார்.  இவரது ஆட்சிக் காலத்தில் வேணாட்டு அரசின் தலைநகரான பத்மநாபபுரம் மாற்றம் செய்யப்பட்டது. அரசின் பெயரும் மாறியது.

 ‘திருவிதாங்கூர் சமஸ்
தானம்’ என்ற பெயரில் தனது நாட்டை பல அதிரடி நடவடிக்கைகளால் விரிவாக்கம் செய்த மார்த்தாண்ட வர்மா, திருவனந்தபுரத்திற்கு தனது தலைநகரை மாற்றினார்.

அப்போது, எட்டு வீட்டு பிள்ளைமார்களின் அதிகாரத்தை ஒடுக்க நினைத்த மார்த்தாண்ட வர்மா, அவர்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளை கையாண்டார். அதிகாரங்களை பறித்தார். அவர்கள் தனக்கு எதிராக எப்போது வேண்டுமானாலும் திசை திரும்பலாம், ஆட்சியை கவிழ்க்க முயற்சிக்கலாம் என்பதால்  அவ்வாறு செய்தார். மேலும், எட்டு வீட்டு பிள்ளைமார்களின் அளவற்ற சொத்துக்களையும் பறிமுதல் செய்தார். அவர்களது குடும்பப் பெண்களுக்கும்  பல்வேறு வகைகளில் துன்பங்கள் விளைவித்தார்.

மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் இந்த நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்ட எட்டு வீட்டு பிள்ளைமார்களில் ஒரு பிரிவினர், தங்களது அதிகாரத்தை வேறு ப குதியில் நிலைநாட்ட முயன்றனர். அதன் தொடர்ச்சியாக, பத்மநாபபுரத்தில் இருந்து கிழக்கு திசை நோக்கி நீண்ட பயணம் மேற்கொண்டனர்.

வங்காள விரிகுடா கடற்கரையோரம் இயற்கை செல்வச் செழிப்புடன் காணப்பட்ட பகுதியை அடைந்ததும், அங்கே தங்களது புதிய குடியேற்றத்தை நிறுவினர்.  இந்த எட்டு வீட்டுப் பிள்ளைமார்தான் இன்றைய குட்டம் மார்த்தாண்டன் வகையறாக்கள்.

வேணாட்டு அரசில் ஒரு மன்னனுக்கு இணையான அதிகாரமும், ஆட்சியை கைப்பற்றும் பலமும் பெற்றிருந்த இவர்கள், தாங்கள் குடியேறிய புதிய பகுதியில்  ஒரு குறுநில அரசை அமைத்தனர். ‘மார்த்தாண்டன்’ என்ற பட்டப் பெயரோடு அப்பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளை ஆட்சி  செய்தனர். அவர்களில் முக்கியமான மன்னர் நவாப் குமார வீரமார்த்தாண்டன்.

ஆரம்ப காலத்தில் இவர் குமார வீரமார்த்தாண்டன் என்றுதான் அழைக்கப்பட்டார். ஒருமுறை, தன்னை எதிர்த்துப் போரிட்ட ஆற்காடு நவாப் படையினரை  மிகவும் தீரத்தோடு எதிர்த்து போரிட்டார். அதைப் பார்த்து வியந்த ஆற்காடு நவாப், தனக்கு இணையான ‘நவாப்’ பட்டத்தை அவருக்கு வழங்கி பெருமை  சேர்த்தான்.


நவாப் குமார வீரமார்த்தாண்டனுக்குப் பிறகு, அவரது வழி வாரிசுகளான ‘மார்த்தாண்டன் வகையறாக்கள்’ அப்பகுதியில் ஆட்சி அதிகாரம்  செலுத்தினர்.

கி.பி.1840-களில், அருகே உள்ள இடையன்குடி என்ற கிறிஸ்தவ மக்கள் அதிகம் வாழும் ஊரில் குடியேறி கிறிஸ்தவ மதத்தை பரப்பியவரும், ‘திராவிட மொழி  நூலின் தந்தை’ எனப் போற்றப்படுபவருமான கால்டுவெல்லிடமே மார்த்தாண்டன் வகையறாக்கள் வரிவசூல் செய்துள்ளனர். அதாவது, அவர்கள், கால் டுவெல்லுக்கு அன்றைய இடையன்குடி ஊரை 99 வருட குத்தகைக்கு விட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்பத்தில் எட்டு வீட்டு பிள்ளைமார்களாக வந்த இவர்கள், காலப்போக்கில் சான்றோர் (நாடார்) குலத்தில் பெண் எடுப்பதும், கொடுப்பதுமாக இருந்து,  இப்போது சான்றோர் குலத்திலேயே முழுமையாக ஐக்கியமாகிவிட்டனர்.

எனினும், பெயருக்கு பின்னால் ‘நாடார்’ என்று எழுதுவதை தவிர்க்கும் இவர்கள்,  அதற்கு பதிலாக ‘மார்த்தாண்டன்’ என்று தங்களை பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்கின்றனர் (உதாரணத்திற்கு : ஆனந்த் மார்த்தாண்டன்).

தங்களது வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் முக்கிய காரணம், ஆனந்தவல்லி அம்மன்தான் என்று கருதிய இவர்கள், எந்த முடிவு எடுத்தாலும் அந்த அம்மனின்  உத்தரவு கேட்டே செய்தனர்.

மேலும், அந்த அம்மனுக்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் பிரம்மாண்டமான முறையில் விழா எடுத்தும் கொண்டாடி  மகிழ்ந்தனர். இன்று வரையிலும் இது தொடர்கிறது.

10 comments:

  1. கேரள அரசரிடம் வேலைக்காரர்களாக இருந்தவர்கள்தான் மார்த்தாண்டன் என்கிறது வரலாறு.

    ReplyDelete
    Replies
    1. வேணாடு-இன்றைய திருவாங்கூரின் அரச குடும்பத்தினரின் வழித்தோன்றல்களே குட்டம் மார்த்தாண்டன்கள் என்று வரலாறு கூறுகிறது.பொறாமையால் சிலர் கூறுவது பிதற்றல். உளறல்கள். ஆதாரப்பூர்வமான சான்றுகளுடன் விரைவில் குட்டம் நவாப் குமாரவீர மார்த்தாண்டரின் சிறப்புகள் பதிவேற்றமாகும்.

      Delete
    2. வேணாடு-இன்றைய திருவாங்கூரின் அரச குடும்பத்தினரின் வழித்தோன்றல்களே குட்டம் மார்த்தாண்டன்கள் என்று வரலாறு கூறுகிறது.பொறாமையால் சிலர் கூறுவது பிதற்றல். உளறல்கள். ஆதாரப்பூர்வமான சான்றுகளுடன் விரைவில் குட்டம் நவாப் குமாரவீர மார்த்தாண்டரின் சிறப்புகள் பதிவேற்றமாகும்.

      Delete
  2. கேரளத்தை ஆண்டவர்கள் வேலைகாரர்கள் அல்ல ஈழவர் என்பது நாடார்களை மட்டும் குறிக்காது இல்லத்துப்பிள்ளைமார்களையும் குறிக்கும் இவர்களுடன் தான் மண உறவு கொண்டனர். சாணர் என்றதனை சான்றோர் எனக்கூறுவது நகைப்பிற்குரியது

    ReplyDelete
  3. கேரளத்தை ஆண்டவர்கள் வேலைகாரர்கள் அல்ல ஈழவர் என்பது நாடார்களை மட்டும் குறிக்காது இல்லத்துப்பிள்ளைமார்களையும் குறிக்கும் இவர்களுடன் தான் மண உறவு கொண்டனர். சாணர் என்றதனை சான்றோர் எனக்கூறுவது நகைப்பிற்குரியது

    ReplyDelete
    Replies
    1. இல்லத்தார் பூர்வீகம் ஆராய்ச்சி செய்தால் கேரளாவிற்கு பிழைக்க வந்தோர் என நாகமய்யா திருவாங்கூர் ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார்.வில்லவர்.ஈழவர் கேரளாவின் பூர்வீகக் குடியினர் சாணார்,சான்றோர் என ஆவணம் கூறுகிறது.பிள்ளை இல்லை

      Delete
  4. இன்னிக்கு தேதில துட்டு வெச்சிருக்கிரவன் உயர்ந்த சாதி, துட்டு இல்லாதவன் தாழ்ந்த சாதி.
    இதில எதுக்குண்ணே பழம்பெருமைலாம்?

    ReplyDelete
  5. குட்டம் மார்த்தாண்ட நாடான்கள் சான்றோர் குலத்தை சேர்ந்தவர்கள். இதற்கு சான்றாக குலசேகரன்பட்டினம் கல்வெட்டு மற்றும் பல்வேறு கல்வெட்டு ஆதாரங்கள் உண்டு. எட்டு வீட்டு பிள்ளைமார் என்று சூத்திர அடையாளத்துடன் அவர்கள் இருந்ததற்கான எந்த சான்றுகளும் இல்லை. ஆதாரம் இல்லாத கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட வேண்டாம்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. உன்ன மாதிரி பொய் வரலாறு எழுதுற நாயாலதான் இங்க நிறைய வரலாறு காணாம போகுது நாயே ...பிள்ளைமார் நாடார் கூட திருமண உறவு வச்சி நாடாராவே மாறிட்டாங்களாம் ...காம கதையா எழுதுற நீ ..குருட்டு கபோதி.. இப்படி எழுத வெக்கமா இல்ல உனக்கு

    ReplyDelete